பல்லாக்கு வலி (ரழி)
கீழக்கரையில் மறைந்து வாழும் இமாம் அல்-குத்பு ஹாஃபிழுல் குர்ஆன் மஹான் அஷ்ஷைகு ஹபீபு முஹம்மது ஸதகதுல்லாஹ் (எ) மஹான் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹூ தஆலா
தோற்றம்
மஹான் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹூ தஆலா அவர்கள் காயல்பட்டினத்தில் ஹிஜ்ரி- 1268 ரபீஉல் அவ்வல் பிறை-13 சுபுஹ் நேரத்தில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை காயல்பட்டிணத்தைச் சேர்ந்த மிகப்பெரிய சூஃபி மகானான அல்- ஹாஃபிழ் முஹம்மது நூஹ் தம்பி ஆலிம் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள். அவர்களின் தாயார் கீழக்கரையைச் சேர்ந்த மிகச் சிறந்த இறைநேசப்பெண்மனியான அன்னை பாத்திமா ரழியல்லாஹூ அன்ஹா அவர்களாவார்கள். மேலும் நாயகம் அவர்கள் qகுத்பஸ்z zஸமான் ஷேய்குனா இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரழியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்களின் மருமகனாவார்கள்.
அவர்களின் புனிதமிக்க வம்சா வழியை இங்கு காணலாம்.
இடம்பெயர்தல் மற்றும் கல்வி
அரூஸிய்யா மதரஸா
மணவாழ்வு
ஷேய்குனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு அவர்கள் கோர்வை செய்த அல்லாஹ் முனாஜாத் பைத்தின் வீடியோ
இவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அவர்களின் ஹலீஃபா வாக இருந்தார்கள். மேலும் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்களின் மீது பல அறபுக் கஸீதாக்களை கோர்வை செய்துள்ளார்கள். அதில் ஒன்று தான் மவாஹிபு ரப்பில் அலிய் ஃபீ மனாகிபிஷ் ஷேய்கி பல்லாக்கு தம்பில் வலிய் என்ற மௌலிது கிதாபாகும்.
அது இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
👇👇👇👇👇👇👇👇👇👇👇
புகழ் மற்றும் கராமத்துகள்
பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அவர்களின் காலத்தில் பெரும் மஹானாகவும், இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் ஹலீஃபா வாகவும், அத்-தரீக்கதுல் அரூஸிய்யதுல் காதிரியா விற்கு சேவை செய்தவர்களாகவும், தீனுடைய ஹித்மதுக்காக ஸ்ரீ லங்கா போன்ற பல நாடுகளுக்கும், கடலோர பகுதிகளான நம்புதாளை, எஸ்.பி.பட்டிணம் போன்ற ஊர்களுக்கும் சென்றவர்களாகவும் இருந்தார்கள்.
மேற்கண்ட கஸீதாவின் ஆடியோ
அஷ்ஷேய்கு முஹம்மது யூசுஃப் ஆலிம் பெருந்தகை அவர்கள் கோர்வை செய்த பைத்
ஷேய்குனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு அவர்கள் நம்புதாளை மக்களை புகழ்ந்து எழுதிய பைத்தின் வீடியோ
ஷேய்குனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு அவர்கள் கோர்வை செய்த மழை பைத்தின் வீடியோ
எஜமான் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மீது அவர்களின் முஹிப்பும் முரீதும் ஆன ஆலிம் அவர்கள் கோர்வை செய்த மவாஹிபு ரப்பில் அலி ஃபீ மனாகிபி பல்லாக்கு வலி என்ற மௌலிது கிதாபின் முதல் பக்கம்
மவாஹிபுல் ஹல்லாக்கில் அலி ஃபீ மனாகிபி பல்லாக்கில் வலி மௌலீது video
👇👇👇👇👇👇👇👇👇👇👇
மவாஹிபு ரப்பில் அலிய் ஃபீ மனாகிபிஷ் ஷேய்கி பல்லாக்கு தம்பில் வலிய்(கிளிக் செய்யவும்).
மேற்கண்ட மவ்லிதின் ஆடியோ
பல்லாக்கு நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புகள் குறித்து பாடப்பட்ட தமிழ்க் கஸீதா (எழுதியவர் & பாடியவர் : ஹாஃபிழ் அல்-காரி முஹ்யித்தீன் ஜலாலி ஆலிம் ஜமாலி அவர்கள்)
இருநூறுக்கும் மேற்பட்ட உலமாக்கள்,கவிஞர்கள், புலவர்கள் எஜமான் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மீது அரபியில் கோர்வை செய்த கஸீதாக்களையெல்லாம் ஒன்றிணைக்கப்பட்ட *மஜ்மூஉல் கஸாஇதுன் நஜாஹ் ஃபீ மித்ஹதி பல்லாக்கு வலிய்யுல் ஃபலாஹ்* என்ற கிதாபின் புகைப்படம்
தாவாஹ் அழைப்புப் பணி
நம்புதாளையில் பல்லாக்கு வலியுல்லாஹ் கல்வத் இருந்த இடத்தில் கட்டப்பட்ட கட்டிடம்
பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்கள் அமர்ந்த மகாமுத் தபஸ்ஸும் என்ற இடம்
ஜாமிஆ அல் அன்வாருல் குதுஸிய்யா
பல்லாக்கு வலியுல்லாஹ் பயன்படுத்திய பல்லக்கு. (இப்பொழுது அது புதுப்பிக்கப்பட்டு அவர்கள் கல்வத் இருந்த நம்புதாளை மகாமுத் தபஸ்ஸுமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது)
மறைவு
இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு அவர்களின் கலீபாவூம் மாணவரும் மற்றும் அவர்கள் பின்வரும் அரூஸிய்யா காதிரிய்யா தரீக்காவின் ஷெய்கு மார்களில் ஒருவரான ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லாஹ் என்கிற பல்லாக்கு வலியுல்லாஹ் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு அவர்களின் ஜியாரத் காணொளி
ஸய்யிதினா இமாம் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆலிம் ஓதி உஸ்தாதாக வேலை பார்த்த அல்-ஜாமிஅத்துல் அரூஸிய்யா(தைக்கா) அரபிக் கல்லூரியின் நூலகத்தில் உள்ள கிதாபுல் விசாதா என்ற கிதாபில் உள்ள அவர்களின் கையெழுத்துப் பிரதி ஆகும். (மேலும் கீழக்கரையில் மறைந்து வாழும் 400 மகான்களின் கையெழுத்து அந்த கிதாபில் பொறிக்கப்பட்டுள்ளது)
மஜ்தூபி மௌலானா
ஸய்யிதுனா குத்புஸ் ஸமான் ஹபீபு முஹம்மது ஸதகதுல்லாஹ் அப்பா (எ) பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை சில மஹான்கள் கண்ணியமாக பல்லாக்கு வலியுல்லாஹில் மஜ்தூபி என்று அழைத்தார்கள்.
இலங்கையிலுள்ள அப்துர் ரஹ்மான் ஆலிம் புலவர் அவர்கள் ஸய்யிதுனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை பல்லாக்கு வலியுல்லாஹில் மஜ்தூபி என்று அழைத்து வஸீலாவாக்கி பாடிய அரபி பைத்துகள்
அஷ்-ஷேய்குல் காமில் தைக்கா ஷுஅய்பு ஆலிம் ஜலாலி நாயகம்
ஸய்யிதுனா மஹான் ஹபீபு முஹம்மது ஸதகதுல்லாஹ் அப்பா (எ) பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்களுக்கும் இக்காலத்தின் அரூஸிய்யதுல் காதிரிய்யா தரீக்காவினுடைய ஷேய்காக திகழுகின்ற அஷ்-ஷேய்குல் காமில் அல்-வலிய்யுல் வாஸில் தைக்கா ஷுஅய்பு ஆலிம் வலியுல்லாஹ் அல்-காதிரிய்யுல் ஜலாலி நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கும் இடையே உள்ள நெருக்கம்.
பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களின் முபாரக்கான தொப்பி ஷெய்கு நாயகம் அவர்களின் கையில் உள்ளது. (இப்பொழுது அவர்களின் குடும்பத்தார்களின் பாதுகாப்பில் உள்ளது.)
பிற்காலத்தில் ஷெய்கு நாயகம் அவர்கள் பயன்படுத்திய, பல்லாக்கு வலியுல்லா நாயகத்தின் தொப்பியைப் புகழ்ந்து, ஷெய்கு நாயகத்தின் மகனார் அல்-ஹாஃபிழ் அஷ்-ஷேய்கு தைக்கா முஹம்மது ஸதகா ஆலிம் ஜலாலி அவர்கள் கோர்வை செய்த அருமையான அரபிக் கஸீதா
மேற்கண்ட பைத்தின் ஆடியோ
பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களை காண வந்திருப்பவர்கள் அமர்ந்து இருக்கும் சில சமயங்களில் சிறிய வயதான ஷேய்குனா ஷுஅய்பு நாயகம் உள்ளே நுழைவார்களாம்…
அப்போது பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்கள்: யாரப்பா நீ? என்று கேட்க (வயது முதிர்ச்சியின் காரணமாக – பார்வை சற்று மங்கியதன் காரணமாக… மறதியால் அல்ல.)
அதற்கு ஷேய்குனா அவர்கள்: “நான் தைக்கா அஹ்மது அப்துல் காதிர் நாயகத்தின் மகன் தான் வந்திருக்கிறேன்” என்று பதிலளித்த உடன், பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்கள்: “ஓ! நம்ம வீட்டு பிள்ளையா! வந்திருப்பது” என்று அகமகிழ்வுடன் கூறி அருகிலழைக்கும் போது ஷேய்குனா ஷுஅய்பு நாயகம் அவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களின் புனித கரங்களை முத்தமிட, பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்கள் ஷேய்குனா ஷுஅய்பு ஆலிம் நாயகத்தின் நெற்றியில் முத்தமிட்டு இவர் நமது பிள்ளை! நல்ல பிள்ளை! நல்ல பிள்ளை! நீங்கள் பெரிய ஆலிமாக ஆவீர்கள்!
பெரிய ஹாஃபிழ் ஆவீர்கள்! என்று துஆச் செய்வார்களாம்.
இது போன்று ஒரு முறையோ! இரு முறை யோ! இல்லை பல முறை இவ்வாறு துஆச் செய்திருக்கிறார்கள் என்று ஷேய்குனா ஷுஅய்பு ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு நாயகம் கூறுவார்கள்.
“இது போன்ற பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களின் துஆக்கள் தான் நான் ஆலிம் ஆவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது” என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள் நமது ஷேய்குனா ஷுஅய்பு ஆலிம் நாயகம் அவர்கள்.
ஸய்யிதினா ஷெய்கு நாயகம் தைக்கா ஷுஐப் ஆலிம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது தலைமையில் 2011-ஆம் ஆண்டு ஸய்யிதினா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் உரூஸில் எடுக்கப்பட்ட வீடியோ
பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்கள் திக்ரில் லயித்து இருக்கின்ற வேளைகளிலும் கூட சிறிய பிள்ளைகளைக் கண்டால் அன்போடு அருகிலழைத்து பேசுவார்களாம்.
பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களின் மீது அதிக காதல் கொண்ட ஆலிம் பெருந்தகை அவர்கள் நாயகத்தின் பேரில் ஒரு யாஸீன் ஓதி அவர்களின் தரிசனத்தை கேட்ட போது அவர்களின் கனவில் தைக்கா ஷுஅய்பு ஆலிம் நாயகத்தை கண்டார்கள். அப்போது இவர்கள் “நமது ஷேய்கு நாயகம் தானே!”” என்று வினவ, அதற்கவர்கள்: “நான் தான் பல்லாக்கு வலியுல்லாஹ்! என்னைப் பாரப்பதும், ஷுஅய்பு நாயகத்தை பார்ப்பதும் ஒன்று தான்” என்று கூறிய செய்தியை ஆலிம் அவர்களே பதிவு செய்தார்கள்.
பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகத்தை ஜிzயாரத்து செய்கின்ற போது ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு நாயகத்தை முன்னிருத்தி அவர்களின் பொருட்டால் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்களிடம் நம் தேவைகளை கேட்டால் உடனடியாக அவர்களிடமிருந்து அதற்கு இஜாபத் அளிக்கப்படுகிறது என்பது பலரின் அனுபவப்பூர்வமான வாக்குகளாகும். இத்தகைய அந்தஸ்தை அடைந்தவர்கள் தான் நமது ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு ஆலிம் நாயகம் அவர்கள்.
ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் பிறப்பதற்கு முன்பும், பிறந்து வளருகின்ற போதும், ஷேய்குனா கௌஸுனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் அரவணைப்பில் தான் இருந்து வந்தார்கள். பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்களின் மறைவுக்கு பின்னரும் அவர்களின் அரவணைப்பில் தான் என்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் இருந்து கொண்டுமிருப்பார்கள்.
ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் 12 ஆவது வயதில் தான் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்கள் வஃபாத் ஆனார்கள். பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்திருந்தாலும் “தன்னுடைய பேரப்பிள்ளையான ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் மூலமாக பல விஷயங்களில் உதவுவதும், ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் திருவுருவத்தில் தனது நேசர்களுக்கு காட்சி வழங்குவதும்” அவர்கள் எந்த அளவிற்கு ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு ஆலிம் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு நாயகத்தின் மீது அன்பு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நமக்கு பறைசாற்றுகின்றது.
விலாயத்தில் விஷேச நிலையில் நின்று ஆட்சி செய்யும் ஷேய்குனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹீ அன்ஹு அவர்களின் முழு அன்பிற்க்கும் பாத்திரமாக திகழுகின்ற நம்முடைய ஷேய்கு நாயகம் ஷேய்குனா அஷ்-ஷேய்குல் காமில் அல்-வலிய்யுல் வாஸில் தைக்கா ஷுஅய்பு ஆலிம் வலியுல்லாஹ் அல்-காதிரியுல் ஜலாலி நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கரம் பற்றிய நாம் பாக்கியவான்களே.
அவர்களை நேசிப்பதாலும், அவர்களின் வழிகாட்டலில் நடப்பதினாலும் ஷேய்குனா பல்லாக்கு வலியுல்லாஹ் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு அவர்களின் அன்பும், நேசமும், அருளும், ஆசியும், உதவியும் நம்மனைவருக்கும் உண்டாகட்டுமாக…
ஸய்யிதுனா குத்புனா மஹான் ஹபீபு முஹம்மது ஸதகதுல்லாஹ் அப்பா நாயகம் என்ற பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மீது கோர்வை செய்யப்பட்ட அரபுக் கஸீதா இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (இதனை கோர்வை செய்தவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், ஷெய்கு நாயகம் தைக்கா ஷுஐபு ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின் மகனாருமான அல்-ஹாஃபிழ் அஷ்-ஷேய்கு தைக்கா முஹம்மது ஸதகா ஆலிம் ஜலாலி அவர்கள்)
👇👇👇👇👇👇👇👇👇👇👇
பல்லாக்கு வலியுல்லாஹ் – அரபுக் கஸீதா (கிளிக் செய்யவும்).
மேற்கண்ட பைத்தின் ஆடியோ
மேற்கண்ட பைத்தின் வீடியோ
அல்லாஹு தஆலா நம்முடைய அரூஸிய்யதுல் காதிரிய்யா தரீக்கா வினுடைய அனைத்து ஷேய்கு மார்களின் பொருட்டினாலும் ஈருலக வெற்றியை நமக்கு தந்தருள்வானாக.
குறிப்பு வாழும் இறைநேசராகிய ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு ஆலிம் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு நாயகத்தின் பொருட்டால் நம்மனைவரையும் கபூலாக்குவானாக…
ஆமீன்…
அல் மதது! யா பல்லாக்கு வலி!
ஷேய்குனா ஷுஅய்பு ஆலிம் இன்தக வஸீலதீ.
المدد يا شيخنا ڥلاك ولي
شيخنا شعيب عالم رضي الله عنه عندك وسيلتي
சுப்ஹானல்லாஹ்!
நமது ஷேய்கு நாயகம் தைக்கா ஷுஐபு ஆலிம் வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் வாழ்வும், வஃபாத்தும் ஸய்யிதுனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் வாழ்வையும், வஃபாத்தையும் ஒத்திருந்தது.
பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தான் நமது ஷேய்கு நாயகம் அவர்களுக்கு ஷுஐபு என்று பெயர் வைத்தார்கள். “எங்களை போன்ற பெரிய குத்பாக ஆவீர்கள்” !!! என்று சுபச் சோபனம் கூறினார்கள்.
பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 1267 ல் பிறந்து 1360 ல் வஃபாத்தாகினார்கள். அப்போது அவர்களின் வயது 93. அதே போல் நமது ஷேய்கு நாயகம் அவர்கள் ஹிஜ்ரி 1349 ல் பிறந்து, 1442 ல் தனது 93 வது வயதில் வஃபாத் எய்தப்பெற்றார்கள்.
சுப்ஹானல்லாஹ் !!! அல்லாஹு அக்பர் !!!!
இப்படி நமது ஷேய்கு நாயகம் அவர்களின் வாழ்வும் வஃபாத்தும் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்களை ஒத்தியே அமைந்திருந்தது.
பல்லாக்கு வலியுல்லாஹ் (ரழி) அவர்களை ஷெய்கு நாயகம் ஜியாரத் செய்யும் பொழுது எடுத்த புகைப்படம்.
பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு அவர்கள் மீது இஸ்திகாசா பைத்
மேற்கண்ட பைத்தின் ஆடியோ
وَبِحَمْدِكَ يَا قَيُّومُ اخْتِمْ .. بِالْخَيْرِ لَنَا كُلًّا وَّأَتِمْ