அரூஸிய்யா தைக்காவின் அற்புத நாதாக்கள்

அரூஸிய்யா தரீக்காவின் தலைவர்களாகிய ஜந்து நாதாக்கள் அடங்கியிருக்கும்
அரூஸிய்யா தைக்காவின் குப்பா
அரூஸிய்யா தைக்காவில் அடங்கியிருக்கும் அந்த நாதாக்கள் பெரும் புகழ் பெற்றவர்கள், அல்லாஹு தஆலா உடைய அவ்லியாக்களில் பெரும் அந்தஸ்தை அடைந்தவர்கள்.
தைக்கா ஸாஹிபு வலியுல்லாஹ்
அந்த நாதாக்களில் முதலிடம் வகிக்கும் இறைநேசர் ஷேய்கு அப்துல் காதிர் தைக்கா ஸாஹிபு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்.
 
தமிழ்நாட்டின் மிகப்பெரும் ஆலிம்களின் உஸ்தாதாக விளங்கினார்கள்.
tekke-kilakarai-thaika-sahib

கீழக்கரை தைக்கா ஸாஹிபு வலியுல்லாஹ் ரவ்ழா ஷரீஃப்

நாயகம் அவர்களின் மாணவர்களில் முக்கியமானவர்கள்:
 
தமிழக மதரஸாக்களின் தாய்க் கல்லூரியாகிய பாக்கியாதுஸ் ஸாலிஹாத் தின் பானி (நிறுவனர்) அஃலா ஹழ்ரத் ரழியல்லாஹு தஆலா அன்ஹு* அவர்களின் தந்தையார்.
 
புனித ஜலாலியா ராத்திபை கோர்வை செய்த மஹான் ஸய்யிதுனா இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்.
 
ஆன்மீக விடிவெள்ளி குணங்குடி மஸ்தான் ஸாஹிபு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்.
 
ஹபீபு அரசர் என்ற பெரும் அரசரும் இவர்களது மாணவர் ஆவார். இப்படி பல இலட்சக்கணக்கானோர் இவர்களது மாணவர்களாக இருந்தார்கள்.
மேற்கண்ட பைத்தின் ஆடியோ
இமாமுல் அரூஸ் நாயகம்
அங்கு அடங்கப்பெற்றிருக்கும் இரண்டாவது வலியுல்லாஹ் அவர்கள்..
 
கீழக்கரை தைக்கா ஸாஹிபு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் மகளார் ஸாரா அம்மா அவர்களை மணம் முடித்தவர்களும், தைக்கா ஸாஹிபு வலியுல்லாஹ் நாயகம் அவர்களுக்கு பிறகு அங்கு கல்வி போதித்த அவர்களின் மாணவருமாகிய ஷேய்குல் மஷாயிஹ் ஸய்யிதுனா ஸய்யிது முஹம்மது இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்.
tekke-imam-al-arus

இமாமுல் அரூஸ் நாயகம் ரவ்ழா ஷரீஃப்

இமாமுல் அரூஸ் நாயகம் அவர்களை குறித்து நாம் அறிந்த விஷயங்கள் ஏராளம்.
 
அவர்கள் அல்லாஹு தஆலா உடைய அவ்லியாக்களில் குத்புர் ரப்பானி, அல் ஆலிமுஸ் ஸமதானி குத்புஸ் ஸமான், ஷேய்குல் இஸ்லாம் போன்ற பெயர்களுக்கு சொந்தக்காரர்கள்.
 
தமிழகத்தின் தலைசிறந்த ஆலிம்களுக்கும், பல மஹான்களுக்கும் உஸ்தாதாக விளங்கியவர்கள்.
 
குறிப்பாக ஸாதாதுனா ஹல்வத்து நாயகம் அவர்கள், ஜல்வத்து நாயகம் அவர்கள், பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்கள், பெரிய ஷேய்கு நாயகம் அவர்கள் போன்ற பல நாதாக்களுக்கு உஸ்தாதாக திகழ்ந்தவர்கள்.
மேற்கண்ட பைத்தின் ஆடியோ
ஹல்வத்து நாயகம்
மூன்றாவதாக அங்கு அடங்கப்பெற்றிருப்பவர்கள்..
tekke-khalwat-nayagam

ஹல்வத்து நாயகம் ரவ்ழா ஷரீஃப்

ஸய்யிதுனா இமாமுல் அரூஸ் நாயகம் அவர்களின் மூத்த மகனார் ஹல்வத்து நாயகம் என்ற பெயரில் அறியப்பட்ட ஸய்யிது அப்துல் காதிர் ஹல்வத்து நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்.
 
 மௌலல் கவ்மு என்ற புனைப்பெயருக்குச் சொந்தக்காரர்கள். பெரும் கூட்டத்தை வழிநடத்திய பெரும் குத்பாக திகழ்ந்தவர்கள்.
 
இவர்களின் வரலாறுகள் நாம் அறிந்ததே!!!
மேற்கண்ட பைத்தின் ஆடியோ
ஜல்வத்து நாயகம்
நான்காவது, ஸய்யிதுனா இமாமுல் அரூஸ் நாயகம் அவர்களின் இரண்டாவது மகனார் ஜல்வத்து நாயகம் என்ற பெயரில் அறியப்பட்ட ஷாஹுல் ஹமீது ஜல்வத்து நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் நினைவிடம்.
tekke-jalwat-nayagam

ஜல்வத்து நாயகம் நினைவிடம்

அவர்கள் ஜன்னதுல் முஅல்லாவில் அடைக்கப்பெற்றுள்ளார்கள்.
 
அவர்களின் மகனார் பெரிய ஷேய்கு நாயகம் அவர்கள், மற்றும் அவர்களின் பேரப்பிள்ளையாகிய நமது ஷேய்கு நாயகம் அவர்களின் கட்டளைப்படி ஸய்யிதுனா ஜல்வத்து நாயகம் அவர்களின் நினைவாக அங்கு ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பைத்தின் ஆடியோ
பெரிய ஷெய்கு நாயகம்
ஜந்தாவதாக அங்கு அமைக்கப்பட்டுள்ள ரவ்ழா ஷரீஃப் ஆனது பெரிய ஷெய்கு நாயகம் என்ற புனைபெயரில் அறியப்பட்ட மஹான் ஸய்யிதுனா தைக்கா அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் ரவ்ழா வாகும்.
tekke-periya-shaikh-nayagam

பெரிய ஷெய்கு நாயகம் ரவ்ழா ஷரீஃப்

இவர்கள் தமிழ்நாடு ஜமாஅதுல் உலமா சபை யின் தலைவராக இருந்தவர்கள்.
மேற்கண்ட பைத்தின் ஆடியோ
ஷெய்கு நாயகம்
ஆறாவது அங்கு அடங்கப்பெற்றிருப்பவர்கள் அங்கு அடங்கப்பெற்றிக்கும் நாதாக்களின் பேரப்பிள்ளை, செல்லப்பிள்ளையாக திகழ்ந்த நமது ஷெய்கு நாயகம் குத்புல் முஅல்லம் அல்-கௌஸுல் முஃபஹ்ஹம் ஸய்யிதுனா தைக்கா ஷுஐபு ஆலிம் வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்.
tekke-shaikh-nayagam

ஷெய்கு நாயகம் ரவ்ழா ஷரீஃப்

மேற்கண்ட பைத்தின் ஆடியோ
அரூஸிய்யா மஷாயிகுமார்களை ஜியாரத் செய்யும் காணொளி
அரூஸிய்யாவில் அடங்கியிருக்கும் நாதாக்களின் பேரப்பிள்ளையும், மேலும் அங்கு இருக்கக்கூடிய வலியான செய்யதினா, ஷெய்குனா தைக்கா ஷுஐபு ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் மகனும் ஆகிய அல் ஹாஃபிழ், அஷ் ஷெய்கு தைக்கா முஹம்மது சதகத் ஆலிம் அவர்கள் கோர்வை செய்த அரபிக்கஸீதா
மேற்கண்ட அரபிக்கஸீதாவின் ஆடியோ
அரூஸிய்யாவில் அடங்கியிருக்கும் நாதாக்களைப் புகழ்ந்து மலையாளத்தில் கோர்வை செய்யப்பட்ட பைத்
அரூஸிய்யா தைக்காவின் சிறப்புகள்
இவ்வாறு பெரும் நாதாக்கள் அடங்கியிருக்கும் புன்னியஸ்தலம்தான் இந்த அரூஸிய்யா தைக்கா.
 
அரூஸிய்யா தைக்காவை குறித்து மஹான்கள் கூறும்போது:
  • துஆவிற்கு இஜாபத்து கிடைக்குமிடம்.
  • எந்த நாட்டத்தை நாடி நாம் சென்றாலும் அங்கு அடங்கியிருக்கின்ற நாதாக்கள் அதை நிறைவேற்றித் தருவதற்கு தகுதியானவர்கள்.
  • அல்லாஹு தஆலா உடைய நிஃமத்துகளை நமக்கு பெற்றுத் தருபவர்கள்.
 
மேலும் இந்த மஹான்கள் அடங்கப்பெற்றிக்கும் இந்த இடத்தில் பல முறை ஸய்யிதுனா ஸய்யிதுஸ் ஸாதாத் ஸய்யிதுல் முர்ஸலீன் ஹாத்திமுன் நபிய்யீன் கண்மணி நாயகம் தாஹா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஹாழிராகியிருக்கிறார்கள். பல மஹான்கள் அதை யக்லத்தி (விழிப்பி) ல் கண்டுள்ளார்கள்.
 
கேரளாவைச் சேர்ந்த பெரும் மஹான் அவர்கள் அரூஸிய்யா தைக்காவிற்கு வந்திருந்த போது அங்கு அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸுலல்லாஹ்!!! என்று கூறினார்கள்.
 
அதற்கு விளக்கம் கேட்ட போது அங்கு கண்மணி நாயகம் தாஹா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஹாழிராகி இருந்தார்கள் என்று கூறினார்கள்.
 
பல மஹான்கள்,  இது அர்ஷிலுள்ள தைக்கா என்று கூட புகழ்ந்து கூறியுள்ளார்கள்; கீழக்கரையின் மதீனா என்றும் கூறியுள்ளார்கள்.
 
அங்கு அடங்கப்பெற்றிருக்கும் நாதாக்கள் ஆஷிகுர் ரஸுலாகவும், ஆன்மீகத்தின் உயர்ந்த அந்தஸ்தையும் அடைந்தவர்களாக இருந்தார்கள்.
 
உம்ரா செய்வதற்கும், மதீனாவிற்கு ஸியாரத் செல்வதற்கும் வசதியில்லாத பலர், ஏழைகள் பலரும் அங்கு வந்து அழுதிருப்பதை நான் கண்டேன்.
 
அவர்கள் இங்கு வந்து ஜியாரத் செய்ததால் மனநிம்மதி கிடைத்ததாக கூறியதையும் நான் கேட்டுள்ளேன்.
 
அப்படி அங்கு எதை நாடி சென்றாலும் அது நிறைவேறும்,
நாட்டங்கள் கைகூடும்.
 
ஸிஹ்ரு (சூனியம்) நீங்குவதற்கானாலும், கல்வி பெற நாடினாலும் அங்கு செல்லுங்கள்!
உங்களின் நாட்டங்கள் கைகூடும்!
 
அதை நமக்கு பெற்றுத் தர தகுதியானவர்கள் அங்கு அடங்கப்பெற்றிருக்கும் நாதாக்கள்.
 
அவர்களின் புகழ்களை நான் சொல்லி முடிக்க முடியாது.
 
அந்த அளவிற்கு உயர்ந்த குத்புகள், மஹான்கள், ஷேய்குமார்கள் அவர்கள்.
 
 
எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா நமது அரூஸிய்யா தைக்காவில் அடங்கியிருக்கும் நமது ஷேய்குமார் களின் பொருட்டால் ஈருலகிலும் வெற்றி பெற்றவர்களின் கூட்டத்தில் நம்மனைவரையும் சேர்த்தருள்புரிவானாக!
 
அவர்களை பல முறை பல முறை ஜியாரத் செய்யும் நஸீபையும் வழங்கி அருள்பாளிப்பானாக!!!
 
ஆமீன்…

* * *

அரூஸிய்யாவில் அடங்கியிருக்கும் நாதாக்களைப் புகழ்ந்து கோர்வை செய்யப்பட்ட மற்றுமொரு பைத்

______________

அரூஸிய்யா நாதாக்களின் மேலுண்டான காதல் பைத்

وَبِحَمْدِكَ يَا قَيُّومُ اخْتِمْ .. بِالْخَيْرِ لَنَا كُلًّا وَّأَتِمْ

 
نَعْمَاكَ عَلَيْنَا ثُمَّ أَدِمْ لُقْيَاكَ بِفِرْدَوْسِ الرَّغَدٖ {٣}
 
 
صَلَوَاتُ اللّٰهِ عَلَى الْمَهْدِي .. اَلْهَادِى الْخَلْقِ إِلَى الرُّشُدِ
 
صَلَوَاتُ اللّٰهِ بِكُلِّ فَمٍ … تَغْشَى الْهَادِى خَيْرَ الْأُمَمِ
 
 
صَلَّى اللّٰهُ عَلَى مُحَمَّدْ .. صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمْ {٢}
 
صَلَّى اللّٰهُ عَلَى مُحَمَّدْ .. يَا رَبِّ صَلِّ عَلَيْهِ وَسَلِّمْ
 
 
 سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ وَسَلٰمٌ عَلَى الْمُرْسَلِيْنَ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ
அரூஸிய்யாவில் அடங்கியிருக்கும் ஐம்பெரும் நாதாக்களில் ஒருவரும், மேலும் அந்த நாதாக்களின் பிள்ளையும் ஆகிய செய்யதினா, ஷெய்குனா தைக்கா ஷுஐபு ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் புனிதமான குரலில் وَبِحَمْدِكَ