பல்லாக்கு வலி (ரழி)

கீழக்கரையில் மறைந்து வாழும் இமாம் அல்-குத்பு ஹாஃபிழுல் குர்ஆன் மஹான் அஷ்ஷைகு ஹபீபு முஹம்மது ஸதகதுல்லாஹ் (எ) மஹான் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹூ தஆலா
தோற்றம்

மஹான் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹூ தஆலா அவர்கள் காயல்பட்டினத்தில் ஹிஜ்ரி- 1268 ரபீஉல் அவ்வல் பிறை-13 சுபுஹ் நேரத்தில் பிறந்தார்கள். இவர்களின் தந்தை காயல்பட்டிணத்தைச் சேர்ந்த மிகப்பெரிய சூஃபி மகானான  அல்- ஹாஃபிழ் முஹம்மது நூஹ் தம்பி ஆலிம் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள். அவர்களின் தாயார் கீழக்கரையைச் சேர்ந்த மிகச் சிறந்த இறைநேசப்பெண்மனியான அன்னை பாத்திமா ரழியல்லாஹூ அன்ஹா அவர்களாவார்கள். மேலும் நாயகம் அவர்கள் qகுத்பஸ்z zஸமான் ஷேய்குனா இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம்  ரழியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்களின் மருமகனாவார்கள்.

 

அவர்களின் புனிதமிக்க வம்சா வழியை இங்கு காணலாம்.

இடம்பெயர்தல் மற்றும் கல்வி
மஹான் அவர்களின் மூன்று வயதாக இருந்தபோது அவர்களின் தந்தை அல் ஹாபிழ் முஹம்மது நூஹ் தம்பி ஆலிம் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இவ்வுலகை விட்டு மரணித்து விட்டார்கள்.  இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
பிறகு அவர்களின் தாய் வளர்ப்பில் தான் நாயகம் அவர்கள் வளர்ந்தார்கள். 
நாயகம் அவர்களின் சிறுவயதிலேயே காயல்பட்டினத்திலிருந்து அவர்களின் குடும்பத்தார்கள் கீழக்கரைக்கு குடியேறி வந்தார்கள்.  அவர்களுடைய சிறிய வயதில் அவ்வூரிலுள்ள அரூஸிய்யா மதரஸாவில் சேர்ந்து கல்வி பயின்றார்கள்.  அந்தப் பிஞ்சு வயதிலேயே மஹான் அவர்கள் அழகிய குணம் உடையவர்களாகவும், இறையச்சம் உடையவர்களாகவும், வலிமார்களின் தன்மை கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.  அதனால் அவர்களுடைய உஸ்தாதும் ஷேய்குமாகிய qகுத்பஸ்z zஸமான் ஷேய்குனா இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரழியல்லாஹூ தஆலா அன்ஹூ நாயகம் அவர்கள் மஹான் அவர்களை  ஃபலாஹ் (ஈருலகிலும் வெற்றி பெற்ற) தம்பி என்று அழைப்பார்கள்.  அதேபோல் மற்ற மாணவர்களும் அவர்களை இவ்வாறே அழைப்பார்கள்.
 
மேலும் ஸய்யிதுனா ஷேய்குனா இமாமுல் அரூஸ்  நாயகம் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் இரு மகன்களான கல்வத் நாயகம் மற்றும் ஜல்வத் நாயகம் ரழியல்லாஹூ அன்ஹூமா இவ்விருவர்களும் பல்லாக்கு நாயகம் ரழியல்லாஹூ அவர்களின் சகோதரர்களாகவும் , தோழர்களாகவும் இருந்தார்கள்.  இவ்விருவர்களும் மஹான் அவர்களை ஃபலாஹ் தம்பி என்றே அழைப்பார்கள்.  மேலும் அவர்களுக்கு அதிகம் கண்ணிமளிப்பவர்களாகவும் இருந்தார்கள்.
 
நாயகம் அவர்கள் சிறு பிராயத்திலேயே முழு குர்ஆனையும் மனனம் செய்த ஹாஃபிழாகவும், மார்க்க கல்வியை கற்றுத் தேறிய ஆலிமாகவும்,
அதே மதரஸாவில் உஸ்தாதாகவும், தன்னுடைய ஷேய்காகிய இமாமுல் அரூஸ் நாயகத்தின் கலீஃபா வாகவும் இருந்தார்கள்.  இமாமுல் அரூஸ் நாயகத்தின் மறைவுக்குப் பிறகு அரூசியத்துல் காதிரிய்யா தரீக்காவின் ஷெய்குமார்களில் ஒருவராக இருந்து மக்களுக்கு பைஅத்தும் வழங்கினார்கள். மேலும், பல்லாக்கு வலியுல்லாஹ்வின் கலீஃபாக்களில் குறிப்பிடத்தக்கவர்கள் –  S.P.பட்டினத்தைச் சேர்ந்த ஷெய்கு முஸ்தபா ஆலிம், நம்புதாளையைச் சேர்ந்த அப்துல் ஹமீது ஆலிம் பாகவி மற்றும் தொண்டி ஷெய்கு யூசுப் ஆலிம் ஆகியோராவர். இவர்களில், ஷெய்கு முஸ்தபா ஆலிம் அவர்கள் ஷாதுலிய்யா தரீக்காவின் கலீஃபா ஆகவும் இருந்தார்கள். காதிரியா தரீக்காவில் பல்லாக்கு வலியுல்லாஹ்வின் கலீஃபாவாக இருந்தார்கள்.
 
பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்கள் அரபு மற்றும் தமிழ் மொழிகளில் தேர்ச்சி பெற்ற அறிஞராகவும் இருந்தார்கள்.  இவர்கள் தமிழில் பல கஸீதாக்களை எழுதி இருக்கிறார்கள்.  அதில் அல்லாஹ் முனாஜாத் என்ற கஸீதா மிக பிரபல்யமானதாகும்.  அப்பாடல்களை பக்தியோடு அனுதினமும் காலை மாலை ஓதி வந்தால் இன்றய விஞ்ஞான உலகத்தின் மருந்துகளால் நலமாகாத மாபெரும் பிணிகள் கூட வல்ல இறைவன் திருவருளால் தீரும். இது அனுபவத்தால் கண்ட உண்மை. மேலும் காலரா, துன்பம் சேர் காலத்திலும் மிக அனுகூலத்தைத் தரும், பி இத்னில்லாஹ் !
அரூஸிய்யா மதரஸா
மணவாழ்வு
பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்களுக்கு 24 வயதான போது அப்துல் காதிர் ஸாஹிபு மரைக்காயரின் மகளான ஆயிஷா உம்மாவை திருமணம் செய்து கொண்டார்கள்​.  பிறகு அம்மையார் இறைவனடி சேர்ந்த 3 வருடத்திற்கு பின் தனது ஷேய்கான இமாமுல் அரூஸ் நாயகத்தின் கட்டளைப்படி அம்மையாரின் சகோதரியான ஸய்யிது முஹம்மது நாச்சியார்​ அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஸய்யிது முஹம்மது என்ற ஆண்மகனாரும், அவர்களின் மூலமாக ஷாஹுல் ஹமீது என்ற பேரப்பிள்ளையும் இருந்தார்கள்.
 
அவ்விருவரும் நாயகத்தின் ஜீவிய காலைத்திலேயே வஃபாத் ஆகிவிட்டார்கள். அதிலும் அவர்களின் அருமை பேரர் ஷாஹுல் ஹமீது நாயகம் மிக சிறிய வயதிலே வஃபாத் ஆகிவிட்டார்கள்​.  இருவரும் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகத்தின் ரவ்ழா ஷரீஃபிற்கு பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஷேய்குனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு அவர்கள் கோர்வை செய்த அல்லாஹ் முனாஜாத் பைத்தின் வீடியோ
காயல்பட்டினத்தை சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் இப்னு ஸய்யிது அஹமது அல்லாமா நஹ்வி அல்-காஹிரி நாயகம் அவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களைப் பற்றி : பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹீ அன்ஹு அவர்கள் அல்லாஹு உடைய அவ்லியாக்களில் மிகப் பெரிய தரஜா உடையவர்கள் என்று புகழ்ந்து இருக்கிறார்கள்.
 

இவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அவர்களின் ஹலீஃபா வாக இருந்தார்கள். மேலும் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்களின் மீது பல அறபுக் கஸீதாக்களை கோர்வை செய்துள்ளார்கள். அதில் ஒன்று தான் மவாஹிபு ரப்பில் அலிய் ஃபீ மனாகிபிஷ் ஷேய்கி பல்லாக்கு தம்பில் வலிய் என்ற மௌலிது கிதாபாகும்.

அது இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

👇👇👇👇👇👇👇👇👇👇👇

 
அதேபோல் கீழக்கரையில் அடங்கியிருக்கும் அல்-ஹாஃபிழுள் குர்ஆன் ஹஜ்ஜுல் ஹரமைன் ஸய்யிது முஹம்மது ஆலிம் புலவர் நாயகம் அவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் வஸீலாவாக்கி ரப்பிடத்தில் கேட்கும் ஒரு முனாஜாத் ஐ எழுதியுள்ளார்கள். அதில் “பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகத்தை கொண்டு நீ வெற்றி பெறச் செய் ரப்பே !” என்றும் கேட்டிருக்கிறார்கள்.
 
மேலும் அவர்களைப் பற்றி ஸய்யிது அஹமது நூருத்தீன் நாயகம் அவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகத்தை பற்றி “கஸீததுன் நஜாஹ் ஃபீ மத்ஹில் ஃபல்லாஹ்” என்ற கஸீதாவை புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.
 
புகழ் மற்றும் கராமத்துகள்
பல வலிமார்கள் மஹான் பல்லாக்கு நாயகம் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களைப் பற்றி புகழ்ந்து கூறியிருக்கிறார்கள்.
 
அவைகள் கீழ்வருமாறு :
      
1.  ஸய்யிதுனா ஷேய்குனா இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் மகனான அஷ்ஷேய்கு குத்புஸ் zஸமான் ஷாஹுல் ஹமீது ஜல்வத் நாயகம் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் மஹான் அவர்களை பற்றி இவர்கள் அவ்லியாக்களில் உயர்ந்த(தரஜா)அந்தஸ்து உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.
 
2.  அதேபோல் ஜல்வத் நாயகம் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் மகனும், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவராகவும் இருந்த அஷ்ஷேய்கு ஷம்ஸுல் உலமா  பெரிய ஷேய்கு நாயகம் தைக்கா அஹ்மது அப்துல் காதிர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் மஹான்  அவர்களை பற்றி “நம்முடைய காலத்தில் கீழக்கரையில் வாழ்ந்த மஹான்களில் மிகப் பெரிய மஹானாக இருந்தார்கள்” என்று சொன்னார்கள். 
மேலும் தன்னுடைய மகனான ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு ஆலிம் நாயகத்தை அவர்களின் காரியங்கள் அனைத்தையும் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகத்தின் அளவிலேயே ஒப்படைக்குமாறு வஸிய்யத்து செய்தார்கள்.
 
3.  மேலும் தைக்கா ஷுஐபு ஆலிம் ஷேய்கு நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அவர்களின் கிதாபான ‘ARABIC, ARWI AND PERSIAN IN SARANDIB AND TAMILNADU’ ல் சொல்கிறார்கள்:

பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அவர்களின் காலத்தில் பெரும் மஹானாகவும், இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் ஹலீஃபா வாகவும், அத்-தரீக்கதுல் அரூஸிய்யதுல் காதிரியா விற்கு சேவை செய்தவர்களாகவும், தீனுடைய ஹித்மதுக்காக ஸ்ரீ லங்கா போன்ற பல நாடுகளுக்கும், கடலோர பகுதிகளான நம்புதாளை, எஸ்.பி.பட்டிணம் போன்ற ஊர்களுக்கும் சென்றவர்களாகவும் இருந்தார்கள்.

4. சுந்தரபாண்டியன்பட்டினத்தின் தலைவராக இருந்த *ஆலிம் புலவர் அல்லாமா அஷ்-ஷேய்கு முஹம்மது முஸ்தஃபா ஆலிம் ரஹிமஹுல்லாஹ்* அவர்கள் மஹான் அவர்களை பற்றி “இவர்கள் மிகப்பெரிய குத்புஸ் zஸமானாக இருந்தார்கள்” என்று சொன்னார்கள். மேலும் மஹான் அவர்களிடத்தில் பைஅத் எனும் (ஞான ஒப்பந்தத்தை) பெற்றிருந்தார்கள். மேலும் அவர்களின் கலீஃபாவாகவும் இருந்தார்கள். அவர்களின் கராமத்துகள் குறித்து கஸீதாக்களும் இயற்றி உள்ளார்கள். அதில் ஒன்றான அரபுத் தமிழ் கஸீதாவை இங்கு காணலாம்.
மேற்கண்ட கஸீதாவின் ஆடியோ
5. அவர்களின் முரீதான தொண்டியைச் சேர்ந்த அஷ்-ஷேய்கு முஹம்மது யூசுஃப் ஆலிம் நாயகம் அவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகத்தை புகழ்ந்து ஒரு கஸீதாவை கோர்வை செய்திருக்கிறார்கள்.
 
மேலும் என்னற்ற வலிமார்களும் அவர்களை பற்றி புகழ்ந்து கூறியிருக்கிறார்கள்.
அஷ்ஷேய்கு முஹம்மது யூசுஃப் ஆலிம் பெருந்தகை அவர்கள் கோர்வை செய்த பைத்
நாயகம் அவர்களிடருந்து பற்பல கராமாத்துகள் வெளிப்பட்டன.  அதன் மூலமாக பல கிதாபுகள் வெளிப்பட்டிருக்கின்றன. இதன்மூலமாக நிறைய மக்கள் இஸ்லாத்தை தழுவியிருக்கிறார்கள்.
 
அவர்களின் சில கராமாத்துகள் பின்வருமாறு :
 
1️⃣ நம்புதாளை எனும் ஊரில் ஒரு முறை மிகக் கொடிய மர்ம காய்ச்சல் பரவி அவ்வூர் மக்கள் மிக துயரத்திற்கு ஆளானார்கள்.. அப்பொழுது மஹான் அவர்கள் அந்த நோயை அவர்களின் கராமாத்தை கொண்டு குணப்படுத்தினார்கள்.
 
2️⃣ அதே ஊரில் ஒரு முறை மஹான் அவர்கள் கடற்கரை ஓரமாக சென்று கொண்டிருக்கும் போது ஒரு மீனவர் விலைபோகாத ஒருவகை மீன்களை வலையில் எடுத்து வந்து “மஹான் அவர்களே! எனக்கு விலைபோகாத இந்த மீன்தான் அடிக்கடி கிடைக்கிறது. இதனால் எனக்கு பெரும் கஷ்டமாக உள்ளது. எனது இந்த வறுமைக்கு ஏதாவது ஒரு வழி செய்யுங்கள்” என்று கெஞ்சினார். அப்போது மஹான் அவர்கள் கடலுக்கருகில் வந்து அந்த மீன் வகையை பார்த்து அவற்றிடம் “இனிமேல் நீங்கள் இந்த பகுதிக்குள் நுழையக்கூடாது” என்று தடை விதித்தனர். 
 
ஸுப்ஹானல்லாஹ்! என்ன ஆச்சரியம்! இன்றுவரை அந்த மீனினமே நம்புதாளைப்பகுதி வாழ் மீனவர்களுக்கு கிடைப்பதில்லை. 
 
ஷேய்குனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு அவர்கள் நம்புதாளை மக்களை புகழ்ந்து எழுதிய பைத்தின் வீடியோ
 
3️⃣ மேலும் அதே ஊரில் மழையில்லாமல் பஞ்சம் ஏற்பட்டபோது மஹான் அவர்கள் மழை பைத் ஒன்றை கோர்வை செய்து கொடுத்தார்கள்.
 
அந்த புனிதமான பைத்தை மழையில்லா பஞ்ச காலங்களில் மழை வேண்டி மனமுருகி ஓதினால் அந்த பைத்து முடிவதற்குள் மழை பொழிவைதை இன்றும் நாம் அனுபவப்பூர்வமாக காணலாம். அந்த மழை பைத்தும் அவர்களின் கராமத்துகளில் ஒன்றாகும்.
 
ஷேய்குனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு அவர்கள் கோர்வை செய்த மழை பைத்தின் வீடியோ
 
4️⃣ மஹான் அவர்கள் வாழும் கால கட்டத்தில் ஒரு முறை கீழக்கரையில் காலரா எனும் கொடிய நோய் தலைவிரித்து ஆடியது. அப்போது அந்த ஊர் மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள் அப்போது சிலர் தங்களின் கனவில் மஹான் அவர்களை கையில் தடியை எடுத்துக் கொண்டு போ! போ !போ ! என விரட்டுவது போன்று கண்டார்கள். 
மறுநாள் காலையிலேயே அவ்வூரைவிட்டு காலரா நோய் சென்றுவிட்டதாக வரலாறுகள் பறைசாற்றுகின்றன. “இது மஹான் அவர்களின் கராமத்தின்  மூலமாக நடந்தது தான்” என்று அவர்களின் மௌலித் ஷரீப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
 
ஒரு முறை ஒரு மீனவருடன் ஒரு பொருளைப் பார்க்க படகில் சென்று கொண்டிருந்த வேளையில் அஸருடைய தொழுகை நேரம் வந்ததால் நான் தொழச் செல்கிறேன் என்று கூறி கடலின் மேல் நடந்து வந்த அற்புதம் இன்றும் கீழக்கரை வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.
 
அவர்களிடம் குழந்தை வேண்டி துஆச் செய்ய நாடிவருபவர்களின் தேவையை உணர்ந்து அவர்கள் முறையிடும் முன்பே அவர்களுக்கு ஆண் (அ) பெண் குழந்தை என்று சுபச் செய்தி கூறியது மிகப் பெரிய கராமத்தல்லவா !!!
எஜமான் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மீது அவர்களின் முஹிப்பும் முரீதும் ஆன ஆலிம் அவர்கள் கோர்வை செய்த மவாஹிபு ரப்பில் அலி ஃபீ மனாகிபி பல்லாக்கு வலி என்ற மௌலிது கிதாபின் முதல் பக்கம்
 
மேலும் இவர்களின் வாழ்கை வரலாறுகளை வைத்து பல மௌலிது மனாக்கிபுகள் கோர்வை  செய்பட்டிருக்கின்றன.
 
அதில் ஒன்று தான் காயல்பட்டினத்தை சேர்ந்த முஹிப்பும் முரீதும் ஆன ஆலிம் பெருந்தகை அவர்கள் கோர்வை செய்த “மவாஹிபுல் ஹல்லாக்கில் அலி ஃபீ மனாகிபி பல்லாக்கில் வலி ” என்று மவ்லீது கிதாபாகும்.
மவாஹிபுல் ஹல்லாக்கில் அலி ஃபீ மனாகிபி பல்லாக்கில் வலி மௌலீது video
காயல்பட்டினத்தை சேர்ந்த முஹம்மது இஸ்மாயில் இப்னு ஸய்யிது அஹமது அல்லாமா நஹ்வி அல்-காஹிரி நாயகம் அவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களைப் பற்றி : பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹீ அன்ஹு அவர்கள் அல்லாஹு உடைய அவ்லியாக்களில் மிகப் பெரிய தரஜா உடையவர்கள் என்று புகழ்ந்து இருக்கிறார்கள். நாயகம் அவர்களின் மீது மவாஹிபு ரப்பில் அலிய் ஃபீ மனாகிபிஷ் ஷேய்கி பல்லாக்கு தம்பில் வலிய் என்ற மௌலிது கிதாபை கோர்வை செய்துள்ளார்கள். அது இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட மவ்லிதின் ஆடியோ
அதேபோல் கீழக்கரையில் அடங்கியிருக்கும் அல்-ஹாஃபிழுள் குர்ஆன் ஹஜ்ஜுல் ஹரமைன் ஸய்யிது முஹம்மது ஆலிம் புலவர் நாயகம் அவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் வஸீலாவாக்கி ரப்பிடத்தில் கேட்கும் ஒரு முனாஜாத் ஐ எழுதியுள்ளார்கள். அதில் “பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகத்தை கொண்டு நீ வெற்றி பெறச் செய் ரப்பே !” என்றும் கேட்டிருக்கிறார்கள்.
 
மேலும் அவர்களைப் பற்றி ஸய்யிது அஹமது நூருத்தீன் நாயகம் அவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகத்தை பற்றி “கஸீததுன் நஜாஹ் ஃபீ மத்ஹில் ஃபல்லாஹ்” என்ற கஸீதாவை புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.
 
பல்லாக்கு நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புகள் குறித்து பாடப்பட்ட தமிழ்க் கஸீதா (எழுதியவர் & பாடியவர் : ஹாஃபிழ் அல்-காரி முஹ்யித்தீன் ஜலாலி ஆலிம் ஜமாலி அவர்கள்)
இது போலவே பல மஹான்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகத்தை பற்றியும், அவர்களை வஸீலாவாக்கியும் இயற்றியுள்ள ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட கஸீதாக்களை மஜ்மூஉல் கஸாயிதுன் நஜாஹ் மஅ மித்ஹதி பல்லாக்கு வலியுல் ஃபலாஹ் என்ற ஒரே மௌலீது கிதாபில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
 
இருநூறுக்கும் மேற்பட்ட உலமாக்கள்,கவிஞர்கள், புலவர்கள் எஜமான் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மீது அரபியில் கோர்வை செய்த கஸீதாக்களையெல்லாம் ஒன்றிணைக்கப்பட்ட *மஜ்மூஉல் கஸாஇதுன் நஜாஹ் ஃபீ மித்ஹதி பல்லாக்கு வலிய்யுல் ஃபலாஹ்* என்ற கிதாபின் புகைப்படம்
தாவாஹ் அழைப்புப் பணி
அவர்கள் வாழும் காலத்தில் (தீன் ஹிதுமத்) மார்க்கப் பணி விடைகள் அதிகமாக செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அவர்கள் தன்னுடைய ஷேய்குனா இமாமுல் அரூஸ் நாயகம் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களின் கட்டளைக்கிணங்க கடற்கரை ஓரப் பகுதிகளான இராமநாதபுரம், தொண்டி, நம்புதாளை, சுந்தரபாண்டியன் பட்டினம் போன்ற பகுதிகளில் அழைப்பு பணி செய்தார்கள்.
 
மேலும் பல்லாக்கு நாயகம் அவர்கள்  தனக்குப் பிடித்த ஊராக நம்புதாளை எனும் ஊரை  குறிப்பிட்டுச் சொன்னார்கள்.  அந்த ஊர் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களாகவும், அந்த ஊர் மக்கள் ஹிதாயத்து வருவதற்கு மூல காரணமாகவும் இருந்தார்கள்.
 
ஆகையால் அந்த ஊர் மக்கள் அவர்களின் மீது அளவுகடந்த மஹப்பத்தை வைத்திருக்கிறார்கள்.  அதனால் ஒவ்வொரு வருடமும் அவ்வூர் மக்கள் அவர்களுடைய கந்தூரியை மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாடி மகிழ்கிறார்கள்.  மஹான் அவர்கள்  அந்த ஊரில் சிறிது காலம் தவம்(கல்வத்) இருந்தார்கள்.  அந்த இடத்தை அவ்வூர் மக்கள் புதுப்பித்து விரிவாக்கம் செய்து ஒரு வீடு அமைப்பில் கட்டிடமாக உருவாக்கி அந்த இடத்திற்கு மகாமுத் தபுஸ்ஸும் என்று  பெயர் வைத்திருக்கிறார்கள்.  
 
மேலும் ஒவ்வொரு வருடமும் ரபீவுல் ஆகிர் பிறை 10,11,12 ஆகிய நாட்களில் முதலாம் நாளன்று ஸய்யிதுனா தாஹா ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உரூஸையும், இரண்டாம் நாளன்று ஸய்யிதுனா குத்புல் அக்தாப் கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அல்-ஜீலானி நாயகம் ரழியல்லாஹூ அன்ஹு அவர்களுடைய உரூஸையும், மூன்றாம் நாளன்று மஹான் பல்லாக்கு நாயகம் ரழியல்லாஹூ அவர்களுடைய  உரூஸையும் சேர்த்து 3-நாட்களுக்கு மிக பிரமாண்டமாகவும், விமர்சையாகவும் கொண்டாடுகிறார்கள். 
 
அவ்வூரைப் புகழ்ந்து நாயகம் அவர்களும் ஒரு கஸுதாவை இயற்றியிருக்கிறார்கள்.  இன்றளவும் அந்த ஊர் மக்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு இந்த கஸீதாவை ஓதுவதை வலமையாக்கி இருக்கிறார்கள்.
 
இவ்வாறு அவ்வூர் மக்களின் உள்ளங்களில் என்றும் முடிசூடா மன்னராகவே பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்கள் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
 
நம்புதாளையில் பல்லாக்கு வலியுல்லாஹ் கல்வத் இருந்த இடத்தில் கட்டப்பட்ட கட்டிடம்
பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்கள் அமர்ந்த மகாமுத் தபஸ்ஸும் என்ற இடம்
இன்னும் நாயகம் அவர்கள் பல இடங்களில் ஹிஃப்ழு மற்றும் ஆலிம் மத்ரஸாக்களை உருவாக்கம்  செய்திருக்கிறார்கள்.  அப்படி அவர்களால் உருவாக்கப்பட்ட மதரஸாக்களில் ஒன்று தான் சுந்தரபாண்டிய பட்டணத்தின் கலங்கரை விளக்கம் என அறியப்படும் ஜாமிஆ அல் அன்வாருல் குதுஸிய்யா அரபி கல்லுாரி யாகும்.
அம்மதரஸாவிற்கு “அன்வாருல் குதுஸிய்யா” (பரிசுத்த ஒளிகள்) என்ற பெயர் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்களால் முஹம்மது முஸ்தஃபா ஆலிம் நாயகம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அருளப்பட்டதாகும்.
ஜாமிஆ அல் அன்வாருல் குதுஸிய்யா
பல்லாக்கு நாயகம் ரழியல்லாஹூ அன்ஹு அவர்கள் ஓதுகின்ற கால கட்டங்களில் அவர்களுடைய உஸ்தாதான ஸய்யிதுனா இமாமுல் அரூஸ் நாயகம் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களுடன் சேர்த்து , 1870 ஆம் ஆண்டில்   ஹிஜாஸுக்குச்(Hijaz)(உம்ரா) சென்றார்கள்.
 
மேலும்  இஸ்லாமிய உலகின் பிற பகுதிகளுக்கும் 1870 ஆம் ஆண்டில்  விஜயம் செய்தார்கள் . திரும்பி வந்த அவர்கள் மீண்டும்  இந்தியாவிலும்  மற்றும்  இலங்கையிலும் பல பகுதிகளுக்கு தூதுவராக சென்றார்கள்.  அவர்களுடைய அந்திம கால கட்டங்களில் மக்களுக்கு மத்தியில் மார்க்க ரீதியான ஆலோசனைகளை சொல்வதற்கும், ஆன்மீக சம்பந்தமான விஷயங்கள்  வழங்குவதற்கும் இமாமுல் அரூஸ் நாயகம் அவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகத்தை அனுப்பி வைத்தார்கள்.
 
அப்படி ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்வதற்கு பல்லாக்கு எனும் வாகனத்தை பயன்படுத்தினார்கள். (automobile மற்றும் போக்குவரத்தை சார்ந்த அனைத்து விஷயங்களும் கண்டு பிடிப்பதற்கு முன்னால்)
 
 இதன் (பல்லாக்கை பயன்படுத்திய) காரணமாகவே அவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் என்று அன்போடு அழைக்கப்பட்டார்கள்.
எனினும் சிலர் இமாமுல் அரூஸ் நாயகம் அவர்கள் அவர்களுக்கு சூட்டிய ஃபலாஹ் தம்பி என்ற பெயரை வைத்து ஃபலாஹ் வலியுல்லாஹ் என்றும் அழைக்கலானார்கள்.
 
பல்லாக்கு வலியுல்லாஹ் பயன்படுத்திய பல்லக்கு. (இப்பொழுது அது புதுப்பிக்கப்பட்டு அவர்கள் கல்வத் இருந்த நம்புதாளை மகாமுத் தபஸ்ஸுமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது)
மறைவு
மகான் அவர்கள்  தன்னுடைய 94-வது வயதில் ரபியுல் ஆகிர் பிறை 26 வெள்ளிக்கிழமை  1360ஆம் ஆண்டு   இவ்வுலகை விட்டும் மறைந்தார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்)
 
அவர்களின் புனித உடல் கீழக்கரையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
மஹான் அவர்கள் வாழும் கால கட்டத்தில் யாரொருவர் அவர்களிடம் சென்று தங்களது கவலைகளை முறையிட்டாளும் அதை அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த கராமத்தின் மூலமாக அந்தக் கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தார்கள்.
 
அதேபோன்று அவர்களுடைய வஃபாத்திற்குப் பிறகும் அவர்களின் அடக்கஸ்தல (ரவ்ழா ஷரீப்) த்திற்கு வந்து தங்களுடைய கஷ்ட நஷ்டங்களை முறையிடுபவர்களுக்கு மஹான் அவர்கள் அவைகளை தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
ஷேய்குனா பல்லாக்கு வலியுல்லாஹ் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு அவர்கள்மீது நேர்ச்சை வைக்கின்ற ஒவ்வொரு காரியமும் வேகமாக நிறைவேற்றப்படுகிறது. பலர் அனுபவத்தால் பலன் அடைந்ததை நம்மால் காண முடியும்.
 
கேரளாவைச் சேர்ந்த முஹம்மது என்பவருக்கு ஸிஹ்ரின் காரணமாக பல ஆண்டுகள் சிரமப்பட்டார். பல தர்ஹாக்களுக்கு சென்று வந்த போதிலும் அது அவருக்கு திருப்தியை தராது போன நிலையில் ஷேய்குனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹீ அன்ஹு அவர்களை பற்றி கேள்விப்பட்டு மஹானின் தர்ஹாவிற்கு வந்து நேர்ச்சை செய்து திரும்பி வருகின்ற போது இலேசான மயக்கம் ஏற்ப்பட அங்குள்ள தூனில் அவர் சாய்ந்திருந்தபோது தர்ஹாவிலிருந்து யாரோ அவரிடம் : “முஹம்மதே ! உம்முடை காரியங்கள் ஹைர் ஆகும் . நீர் அனுதினமும் 313 முறை “سلام قولا من رب رحيم” என்ற ஆயத்தை ஓதி ஊதி குடிப்பதை தொடர்ந்து 7 நாள் செய்து வாரும்” என்று கூறுவது போல இருந்தது. அதே போல் அவரும் செய்ய இதுநாள் வரை அவருக்கு இருந்த ஸிஹ்ருடைய சிரமங்கள் நீங்கி இப்போது நிம்மதியாக​இருந்து கொண்டிருக்கிறார்.
 
அது போல ஒருவருக்கு கண்பார்வையற்ற குழந்தை பிறந்தது. அதற்கு ஒரு கண்ணில் மட்டும் இலேசான பார்வை இருந்தது. மருத்துவர்கள் எங்களால் முடியாது! எனினும் இறையருளால் கிடைக்கலாம் என்று கூறவே, அவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களைப் பற்றி அறிந்து, அவர்களின் ஹழரத்தில் வந்து நேர்ச்சை செய்து ஏழைகளுக்கு உணவளிக்க மூன்றே நாளில் பிறக்கும் போதே பார்வையற்று பிறந்த அக்குழந்தைக்கு பார்வை கிடைத்தது அவர்களின் மீது செய்த நேர்ச்சை பலனே ஆகும்.
 
அவர்களின் மீது செய்த நேர்ச்சையின் பலனை அனுபவித்ததால் கேரள மக்கள் நாயகத்தை மிகவும் விஷேசமான கொண்டாடுகிறார்கள். அவர்களின் தர்ஹாவிற்கு ஜியாரத்திற்க்காக கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். கேரள மக்களிடம் மஹான் அவர்கள் பிரபலமாக இருக்கிறார்கள்.
 
பல மஹான்கள், “தமிழ்நாட்டில் இரண்டாவது ஏர்வாடி இருந்திருந்தால் அது பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகத்தின் தர்ஹா ஷரீஃபா கத்தான் இருக்கும்; கீழக்கரையில் ஒரு ஏர்வாடி இருந்திருந்தால் அது பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகத்தின் தர்ஹா ஷரீஃபா கத்தான் இருக்கும்.  அந்த அளவுக்கு ஸிஹ்ரானாலும், எந்த நோயானாலும், எந்த பிரச்சனையானாலும் அங்கு சென்றால் உடனுக்குடன் தீர்வு கிடைத்துவிடும். ஆனால் பலருக்கும் அந்த அருமை புரிய வில்லை” என்று தன்னிடம் கூறியதாக அஷ்-ஷேய்குல் காமில் அல்-வலிய்யுல் வாஸில் தைக்கா ஷுஅய்பு ஆலிம் அல்-காதிரியுல் ஜலாலி நாயகம் அவர்கள் கூறுகிறார்கள்.
இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு அவர்களின் கலீபாவூம் மாணவரும் மற்றும் அவர்கள் பின்வரும் அரூஸிய்யா காதிரிய்யா தரீக்காவின் ஷெய்கு மார்களில் ஒருவரான ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லாஹ் என்கிற பல்லாக்கு வலியுல்லாஹ் ரழியல்லாஹீ த‌ஆலா அன்ஹு அவர்களின் ஜியாரத் காணொளி
“கீழக்கரை மக்களுக்கு பணம் சம்பந்தமான விஷயங்களில் பரக்கத் ஏற்ப்பட பெரிய காரணமே ஷேய்குனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹீ அன்ஹு அவர்களின் துஆ பார்க்கத் ஆகும்” என்று கீழக்கரையில் மறைந்து வாழும் அல்-ஹாஃபிழுள் குர்ஆன் ஹாஜ்ஜுல் ஹரமைன் ஸய்யிது முஹம்மது ஆலிம் புலவர் ரழியல்லாஹீ அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
ஸய்யிதினா இமாம் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆலிம் ஓதி உஸ்தாதாக வேலை பார்த்த அல்-ஜாமிஅத்துல் அரூஸிய்யா(தைக்கா) அரபிக் கல்லூரியின் நூலகத்தில் உள்ள கிதாபுல் விசாதா என்ற கிதாபில் உள்ள அவர்களின் கையெழுத்துப் பிரதி ஆகும். (மேலும் கீழக்கரையில் மறைந்து வாழும் 400 மகான்களின் கையெழுத்து அந்த கிதாபில் பொறிக்கப்பட்டுள்ளது)
மஜ்தூபி மௌலானா

ஸய்யிதுனா குத்புஸ் ஸமான் ஹபீபு முஹம்மது ஸதகதுல்லாஹ் அப்பா (எ) பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை சில மஹான்கள் கண்ணியமாக பல்லாக்கு வலியுல்லாஹில் மஜ்தூபி என்று அழைத்தார்கள்.

 
பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்கள் சில காலம் ஜத்பிலேயே இருந்தார்கள்.
 
அல்லாமா ஸைனுத்தீன் மஹ்தூமுஸ் ஸானி ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் கோர்வை செய்த முர்ஷிதுத் துல்லாபு என்ற ஆன்மீக கிதாபை பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்கள் 4 வருடம் பாடம் நடத்தி வந்தார்கள்.
 
அவ்வேளையில் அந்த கிதாபின் ஆன்மீக கருத்துக்கள் அவர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்து அவர்களை ஜத்புடைய நிலைக்கு கொண்டு சென்று விட்டது. பல வருடங்களாக இந்த கிதாபை தலைமேல் வைத்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். இந்த கிதாபு தான் அவர்களை ஜத்பிற்கு கொண்டு சென்று, பல்லாக்கு வலியுல்லாஹில் மஜ்தூபி என்ற புனைப் பெயரும் அவர்களுக்கு கிடைக்க காரணமாக அமைந்தது
இலங்கையிலுள்ள அப்துர் ரஹ்மான் ஆலிம் புலவர் அவர்கள் ஸய்யிதுனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களை பல்லாக்கு வலியுல்லாஹில் மஜ்தூபி என்று அழைத்து வஸீலாவாக்கி பாடிய அரபி பைத்துகள்
அஷ்-ஷேய்குல் காமில் தைக்கா ஷுஅய்பு ஆலிம் ஜலாலி நாயகம்

ஸய்யிதுனா மஹான் ஹபீபு முஹம்மது ஸதகதுல்லாஹ் அப்பா (எ) பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்களுக்கும் இக்காலத்தின் அரூஸிய்யதுல் காதிரிய்யா தரீக்காவினுடைய ஷேய்காக திகழுகின்ற அஷ்-ஷேய்குல் காமில் அல்-வலிய்யுல் வாஸில் தைக்கா ஷுஅய்பு ஆலிம் வலியுல்லாஹ் அல்-காதிரிய்யுல் ஜலாலி நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கும் இடையே உள்ள நெருக்கம்.

 
ஸய்யிதுனா இமாமுல் அரூஸ் நாயகம் ரழியல்லாஹீ அன்ஹு அவர்களுடைய கலீஃபாக்களில் இறுதியாக இவ்வுலகை விட்டு மறைந்தவர்கள் ஸய்யிதுனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹீ அன்ஹு அவர்கள் ஆவார்கள்.
 
பெரிய ஷேய்கு நாயகம் தைக்கா அஹ்மது அப்துல் காதிர் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் மனைவியான அன்னை மர்யம் ஆயிஷா ரழியல்லாஹீ அன்ஹா அவர்கள் கருவுற்று 8 மாதங்கள் கழித்து, அன்னையவர்களின் கனவில் பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்கள் தோன்றி: இந்த பிள்ளை நம்மைச் சார்ந்த பிள்ளை என்றும், பிறந்தபின் அவர்களுக்கு​ ஷுஐபு என்ற பெயரை சூட்ட வேண்டும் என்றும்​ கூறினார்கள்.
 
இங்கிருந்தே பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்களுக்கும் ஷேய்குனா ஷுஅய்பு ஆலிம் நாயகத்திற்குமான தொடர்பு ஆரம்பமாகியது.
 
(இது பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களின் ஜீவிய காலைத்திலேயே நடந்த நிகழ்ச்சி. மற்றும் அன்னை மர்யம் ஆயிஷா ரழியல்லாஹீ அன்ஹா அவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்)
 
பிறகு குழந்தையை அன்னையவர்கள் பெற்றெடுத்த போது பெரிய ஷேய்கு நாயகம் அவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களின் ஆசைப் படியே அக்குழந்தைக்கு ஷுஐபு என்ற பெயரை சூட்டினார்கள்.
 
பிறகு ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு நாயகத்திற்கு 3 வயதான போது அவர்களின் தந்தையார் பெரிய ஷேய்கு நாயகம் அவர்கள் அவர்களை பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களிடம் அழைத்துச் சென்று,  “நாயகமே! இவர்களை தங்களிடம் நான் ஒப்படைக்கிறேன். இனி இவர்களின் எல்லா முன்னேற்றங்களுக்கும் உங்களை பொறுப்பு சாட்டுகிறேன்”.
 
மேலும் தன் மகனான தைக்கா ஷுஅய்பு ஆலிம் நாயகத்திடம்: “மகனே! உங்களுக்கு எது வேண்டுமானாலும் பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களை நாடுங்கள்! அவர்களையே உங்களுக்கு பொறுப்பாக நான் ஆக்கியிருக்கிறேன். உங்களை நான் அவர்களிடம் நெருக்கி வைத்துள்ளேன்” என்று வஸிய்யத் செய்தார்கள்.
 
ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு ஆலிம் நாயகம் எப்பொழுதும்​: “என்னுடைய ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்கள் முக்கியமான காரணமாக இருந்தார்கள்” என்று கூறுவார்கள்.
 
தைக்கா ஷுஅய்பு ஆலிம் நாயகத்தை பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்கள் தன்னுடைய பேரப்பிள்ளையாகவே பாவித்தார்கள்.
 
இதனால் தான் அவர்களின் வஃபாத்திற்கு பிறகு அவர்களின் முபாரக்கான தொப்பி ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு நாயகத்திற்கு அருளப்பட்டது
பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களின் முபாரக்கான தொப்பி ஷெய்கு நாயகம் அவர்களின் கையில் உள்ளது. (இப்பொழுது அவர்களின் குடும்பத்தார்களின் பாதுகாப்பில் உள்ளது.)
பிற்காலத்தில் ஷெய்கு நாயகம் அவர்கள் பயன்படுத்திய, பல்லாக்கு வலியுல்லா நாயகத்தின் தொப்பியைப் புகழ்ந்து, ஷெய்கு நாயகத்தின் மகனார் அல்-ஹாஃபிழ் அஷ்-ஷேய்கு தைக்கா முஹம்மது ஸதகா‌ ஆலிம் ஜலாலி அவர்கள் கோர்வை செய்த அருமையான அரபிக் கஸீதா
மேற்கண்ட பைத்தின் ஆடியோ

பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களை காண வந்திருப்பவர்கள் அமர்ந்து இருக்கும் சில சமயங்களில் சிறிய வயதான ஷேய்குனா ஷுஅய்பு நாயகம் உள்ளே நுழைவார்களாம்…

 

அப்போது பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்கள்: யாரப்பா நீ? என்று கேட்க  (வயது முதிர்ச்சியின் காரணமாக – பார்வை சற்று மங்கியதன் காரணமாக… மறதியால் அல்ல.)

அதற்கு ஷேய்குனா அவர்கள்: “நான் தைக்கா அஹ்மது அப்துல் காதிர் நாயகத்தின் மகன் தான் வந்திருக்கிறேன்” என்று பதிலளித்த உடன், பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்கள்: “ஓ! நம்ம வீட்டு பிள்ளையா! வந்திருப்பது” என்று அகமகிழ்வுடன் கூறி அருகிலழைக்கும் போது ஷேய்குனா ஷுஅய்பு நாயகம் அவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களின் புனித கரங்களை முத்தமிட, பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்கள் ஷேய்குனா ஷுஅய்பு ஆலிம் நாயகத்தின் நெற்றியில் முத்தமிட்டு இவர் நமது பிள்ளை! நல்ல பிள்ளை! நல்ல பிள்ளை! நீங்கள் பெரிய ஆலிமாக ஆவீர்கள்!
பெரிய ஹாஃபிழ் ஆவீர்கள்! என்று துஆச் செய்வார்களாம்.

 

இது போன்று ஒரு முறையோ! இரு முறை யோ! இல்லை பல முறை இவ்வாறு துஆச் செய்திருக்கிறார்கள் என்று ஷேய்குனா ஷுஅய்பு ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு நாயகம் கூறுவார்கள்.

 

“இது போன்ற பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களின் துஆக்கள் தான் நான் ஆலிம் ஆவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது” என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள் நமது ஷேய்குனா ஷுஅய்பு ஆலிம் நாயகம் அவர்கள்.

ஸய்யிதினா ஷெய்கு நாயகம் தைக்கா ஷுஐப் ஆலிம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது தலைமையில் 2011-ஆம் ஆண்டு ஸய்யிதினா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் உரூஸில் எடுக்கப்பட்ட வீடியோ

பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்கள் திக்ரில் லயித்து இருக்கின்ற வேளைகளிலும் கூட சிறிய பிள்ளைகளைக் கண்டால் அன்போடு அருகிலழைத்து பேசுவார்களாம்.

பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களின் மீது அதிக காதல் கொண்ட ஆலிம் பெருந்தகை அவர்கள் நாயகத்தின் பேரில் ஒரு யாஸீன் ஓதி அவர்களின் தரிசனத்தை கேட்ட போது அவர்களின் கனவில் தைக்கா ஷுஅய்பு ஆலிம் நாயகத்தை கண்டார்கள். அப்போது இவர்கள் “நமது ஷேய்கு நாயகம் தானே!”” என்று வினவ, அதற்கவர்கள்: “நான் தான் பல்லாக்கு வலியுல்லாஹ்! என்னைப்​ பாரப்பதும், ஷுஅய்பு நாயகத்தை பார்ப்பதும் ஒன்று தான்” என்று கூறிய செய்தியை ஆலிம் அவர்களே பதிவு செய்தார்கள். 

பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகத்தை ஜிzயாரத்து செய்கின்ற போது ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு நாயகத்தை முன்னிருத்தி அவர்களின் பொருட்டால் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்களிடம் நம் தேவைகளை கேட்டால் உடனடியாக அவர்களிடமிருந்து அதற்கு இஜாபத் அளிக்கப்படுகிறது என்பது பலரின் அனுபவப்பூர்வமான வாக்குகளாகும். இத்தகைய அந்தஸ்தை அடைந்தவர்கள் தான் நமது ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு ஆலிம் நாயகம் அவர்கள்.

ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் பிறப்பதற்கு முன்பும், பிறந்து வளருகின்ற போதும், ஷேய்குனா கௌஸுனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் அரவணைப்பில் தான் இருந்து வந்தார்கள். பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்களின் மறைவுக்கு பின்னரும் அவர்களின் அரவணைப்பில் தான் என்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும்​ இருந்து கொண்டுமிருப்பார்கள்.

ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் 12 ஆவது வயதில் தான் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்கள் வஃபாத் ஆனார்கள். பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்திருந்தாலும் “தன்னுடைய பேரப்பிள்ளையான ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் மூலமாக பல விஷயங்களில் உதவுவதும், ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு ஆலிம் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் திருவுருவத்தில் தனது நேசர்களுக்கு காட்சி வழங்குவதும்” அவர்கள் எந்த அளவிற்கு ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு ஆலிம் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு நாயகத்தின் மீது அன்பு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நமக்கு பறைசாற்றுகின்றது.

விலாயத்தில் விஷேச நிலையில் நின்று ஆட்சி செய்யும் ஷேய்குனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹீ அன்ஹு அவர்களின் முழு அன்பிற்க்கும் பாத்திரமாக திகழுகின்ற நம்முடைய ஷேய்கு நாயகம் ஷேய்குனா அஷ்-ஷேய்குல் காமில் அல்-வலிய்யுல் வாஸில் தைக்கா ஷுஅய்பு ஆலிம் வலியுல்லாஹ் அல்-காதிரியுல் ஜலாலி நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கரம் பற்றிய நாம் பாக்கியவான்களே.

அவர்களை நேசிப்பதாலும், அவர்களின் வழிகாட்டலில் நடப்பதினாலும் ஷேய்குனா பல்லாக்கு வலியுல்லாஹ் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு அவர்களின் அன்பும், நேசமும், அருளும், ஆசியும், உதவியும் நம்மனைவருக்கும் உண்டாகட்டுமாக…

ஸய்யிதுனா குத்புனா மஹான் ஹபீபு முஹம்மது ஸதகதுல்லாஹ் அப்பா நாயகம் என்ற பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மீது கோர்வை செய்யப்பட்ட அரபுக் கஸீதா இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (இதனை கோர்வை செய்தவர்கள் பல்லாக்கு வலியுல்லாஹ் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், ஷெய்கு நாயகம் தைக்கா ஷுஐபு ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின் மகனாருமான அல்-ஹாஃபிழ் அஷ்-ஷேய்கு தைக்கா முஹம்மது ஸதகா‌ ஆலிம் ஜலாலி அவர்கள்)

👇👇👇👇👇👇👇👇👇👇👇

பல்லாக்கு வலியுல்லாஹ் – அரபுக் கஸீதா (கிளிக் செய்யவும்).

மேற்கண்ட பைத்தின் ஆடியோ
மேற்கண்ட பைத்தின் வீடியோ

 

அல்லாஹு தஆலா நம்முடைய அரூஸிய்யதுல் காதிரிய்யா தரீக்கா வினுடைய அனைத்து ஷேய்கு மார்களின் பொருட்டினாலும் ஈருலக வெற்றியை நமக்கு ​தந்தருள்வானாக.

குறிப்பு வாழும்​ இறைநேசராகிய ஷேய்குனா தைக்கா ஷுஅய்பு ஆலிம் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு நாயகத்தின் பொருட்டால் நம்மனைவரையும் கபூலாக்குவானாக…

ஆமீன்…

அல் மதது! யா பல்லாக்கு வலி!

ஷேய்குனா ஷுஅய்பு ஆலிம் இன்தக வஸீலதீ.

المدد يا شيخنا ڥلاك ولي

شيخنا شعيب عالم رضي الله عنه عندك وسيلتي

சுப்ஹானல்லாஹ்!


நமது ஷேய்கு நாயகம் தைக்கா ஷுஐபு ஆலிம் வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் வாழ்வும், வஃபாத்தும் ஸய்யிதுனா பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் வாழ்வையும், வஃபாத்தையும் ஒத்திருந்தது.

 

பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தான் நமது ஷேய்கு நாயகம் அவர்களுக்கு ஷுஐபு என்று பெயர் வைத்தார்கள். “எங்களை போன்ற பெரிய குத்பாக ஆவீர்கள்” !!! என்று சுபச் சோபனம் கூறினார்கள்.


பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 1267 ல் பிறந்து 1360 ல் வஃபாத்தாகினார்கள். அப்போது அவர்களின் வயது 93.  அதே போல் நமது ஷேய்கு நாயகம் அவர்கள் ஹிஜ்ரி 1349 ல் பிறந்து, 1442 ல் தனது 93 வது வயதில் வஃபாத் எய்தப்பெற்றார்கள்.

 

சுப்ஹானல்லாஹ் !!!  அல்லாஹு அக்பர் !!!!

 

இப்படி நமது ஷேய்கு நாயகம் அவர்களின் வாழ்வும் வஃபாத்தும் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்களை ஒத்தியே அமைந்திருந்தது.

பல்லாக்கு வலியுல்லாஹ் (ரழி) அவர்களை ஷெய்கு நாயகம் ஜியாரத் செய்யும் பொழுது எடுத்த புகைப்படம்.
பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹீ தஆலா அன்ஹு அவர்கள் மீது இஸ்திகாசா பைத்
WhatsApp Image 2023-08-22 at 6.04.40 PM
மேற்கண்ட பைத்தின் ஆடியோ
 
இன்னும் பல அனுபவப்பூர்வமான நிகழ்வுகள்….
 
கட்டுரையின் நீளம் கருதி சுருக்கப்பட்டிருக்கிறது…
 
எனவே, எல்லாம் வல்ல அல்லாஹு ஜல்ல ஷஃனுஹு தஆலா எஜமான் பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் அவர்களின் பொருட்டால் நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக!
 
நம்முடைய நல்லமல்களை ஏற்றுக் கொள்வானாக!
 
நம்முடைய நாட்ட தேட்டங்களை பூர்த்தி செய்வானாக!
 
நம்முடைய ஈமானிலும், கல்வியிலும், அமலிலும், குடும்பத்திலும், வியாபாரத்திலும், பொருளாதாரத்திலும், ஆஃபியத்திலும், இவ்வுலக மறுஉலக விஷயங்கள் அனைத்திலும் பரக்கத் செய்வானாக…
 
எல்லாம் வல்ல அல்லாஹு ஜல்ல ஷஃனுஹு தஆலா ஸய்யிதுனா கௌஸுனா குத்புனா ஷேய்குனா ஹபீபு முஹம்மது ஸதகதுல்லாஹ் (எ) பல்லாக்கு வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹீ அன்ஹு அவர்களுடன் சேர்ந்து சுவனத்தில் பிரவேசிக்கும் நற்பாக்கியத்தை நமக்கும், நம் குடும்பத்தார்களுக்கும், நம் உஸ்தாதுமார்களுக்கும், இக்கட்டுரையை எழுத கட்டளையிட்டவர்களுக்கும், எழுதியவர்களுக்கும், அதற்கு உதவியவர்களுக்கும், உலக வாழ் முஸ்லிம்கள் முஃமின்கள் அனைவருக்கும் தந்தருள்புரிவானாக …
 
ஆமீன்…
ஆமீன்…..
யாரப்பல் ஆலமீன்….

وَبِحَمْدِكَ يَا قَيُّومُ اخْتِمْ .. بِالْخَيْرِ لَنَا كُلًّا وَّأَتِمْ

 
نَعْمَاكَ عَلَيْنَا ثُمَّ أَدِمْ لُقْيَاكَ بِفِرْدَوْسِ الرَّغَدٖ {٣}
 
صَلَوَاتُ اللّٰهِ عَلَى الْمَهْدِي .. اَلْهَادِى الْخَلْقِ إِلَى الرُّشُدِ
 
صَلَوَاتُ اللّٰهِ بِكُلِّ فَمٍ … تَغْشَى الْهَادِى خَيْرَ الْأُمَمِ
 
صَلَّى اللّٰهُ عَلَى مُحَمَّدْ .. صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمْ {٢}
 
صَلَّى اللّٰهُ عَلَى مُحَمَّدْ .. يَا رَبِّ صَلِّ عَلَيْهِ وَسَلِّمْ
 
 سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ وَسَلٰمٌ عَلَى الْمُرْسَلِيْنَ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ